மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒரு கல் ஒரு கண்ணாடி மு‌ன்னோ‌ட்ட‌ம்.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம். அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸே படத்தை தயா‌ரித்துள்ளது.

இயக்குனர் ராஜேஷின் பலம் காதலும், காமெடியும் என்பதை அவரது முதலிரண்டு படங்களைப் பார்த்த சின்னக் குழந்தையும் சொல்லும். அதே பார்முலாவில்தான் இந்தப் படமும் தயாராகியிருக்கிறது. ஹீரோவின் தோழன் சந்தானம் என்பதிலும் மாற்றமில்லை. ஏறக்குறைய சந்தானம்தான் இதில் இரண்டாவது ஹீரோ.

ராஜேஷின் முதலிரண்டுப் படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை முயன்றிருக்கிறார். அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள் இசையை கேட்டவர்கள்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. காமெடிக்கும், கிளாமருக்கும் நூறு சதவீத உத்தரவாதம் என்பதால் படம் நிச்சய வெற்றி என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.