பிறந்தநாளின் போது தவறாமல் எஸ்கேப்பாகிவிடுவார் ரஜினி. ரசிகர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்றுதான் இந்த ஓடி ஒளிதல். (படம் ரிலீஸாகும் போது மட்டும் ரசிகர்கள் திரண்டு வர வேண்டும். யாருக்கு என்ன இடையூறு ஏற்பட்டாலும் சரி.)
இந்தமுறை தனது பிறந்தநாளில் சென்னையில் இருந்து ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட போது ரசிகர்கள் செய்து கொண்ட பிரார்த்தனைகளை ரஜினி மறக்கவில்லை. அந்த ரசிகர்களை தனது பிறந்தநாளில் சந்திக்க ஆசைப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.