சிவாஜி, கமல்ஹாசன் மாதிரி எனக்கு நடிக்கத் தெரியாது. என்னுடைய பலம் வேகம். அந்த வேகம் இருக்கும்வரை நடிப்பேன் என்றார் ரஜினி.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்கள் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த விழாவுக்காக முத்துராமனை வாழ்த்தி ரஜினி கடிதம் அளிப்பதாகவும், அதனை மேடையில் படிப்பதாகவும் இருந்தது. ஆனால் கடிதத்துக்குப் பதில் ரஜினியே நேரில் விழாவுக்கு வந்து அனைவரையும் பரவசப்படுத்தினார்.
அப்போது பேசிய ரஜினி, வெற்றிக்காக இல்லை முத்துராமன் மீதிருந்த அன்புக்காகவே 25 படங்களில் நடித்தேன் என்றார்.
என்னுடைய பலம், மூலம் எல்லாமே வேகம். வேகம் இருக்கும்வரை ஓய்வு பெற மாட்டேன் என்று அவர் கூறிய போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.