ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த சரணின் இப்போதைய நிலை அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தயாரிப்பிலும் நஷ்டம், இயக்குனராகவும் தோல்வி. கடைசியாக வெளிவந்த அஜீத்தின் அசலும் பெருத்த நஷ்டம்.
இந்நிலையில் வாட்டசாட்டம் என்றொரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளார். தயாரிப்பும் அவரே. ஆனால் ஹீரோ?
நாம் சில வாரங்கள் முன்பு தெரிவித்த மாதிரி இந்தக் கதைக்கு அவர் விரும்பும் ஹீரோ ஜீவா. இதனை இப்போது சரணே மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஜீவா நீதானே என் பொன்வசந்தம், முகமூடி, அகமது இயக்கும் படம், ஜனநாதனின் சரித்திரப்படம், ராஜேஷ் இயக்கும் படம் என படு பிஸி.
ஜீவாவுக்கு இணையான வேறு ஹீரோவை தேடுகிறார் சரண்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.