ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தெரிந்த விஷயம். ரஜினி மகளும், கமல் மகளும் இணைந்து பணியாற்றும் படம் என்பதால் ரஜினியும், கமலும் 3 படப்பிடிப்பு தளத்துக்கு வந்து தங்கள் ஆசியை தெரிவிப்பார்கள் என்றார்கள். அது பொய். அப்படி எதுவும் நடக்கவில்லை.
ரா.ஒன் படத்திலேயே ஒரு காட்சியில் தோன்றிய ரஜினி, 3 படத்தில் ஒரு காட்சியில் தோன்ற மாட்டாரா? நிச்சயம் தனது மகள் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் நடிப்பார் என்றார்கள். அதுவும் கட்டுக்கதை. அப்படியானால் நிஜம்?
3 ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.