சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் நேற்று அன்னதானம் வழங்கியதோடு கோயில்களில் தேர் இழுத்தும், பிரார்த்தனையும் செய்தனர்.
உடல் நலக் குறைவு காரணமாக முக்கியமான சிகிச்சை மேற்கொண்டு மறு பிறவி எடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இந்தாண்டு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கட் அவுட்டுகள், தோரணங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், இணையதளங்களில் சிறப்புக் கட்டுரைகள் என தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோயில்களுக்கு தங்கத் தேர் இழுத்தும், ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
தனது பிறந்தநாளையொட்டி ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் ரஜினிகாந்த் நேற்று வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து தர்மஸ்தலாவுக்கு சென்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.