மங்காத்தா ஹீரோ போலீஸ் என்றாலும் அதில் அஜீத் போலீஸாக வருவதில்லை. ஆனால் வெங்கட்பிரபுவின் அடுத்தப் படம் முழுக்க போலீஸ் கதை.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கிரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடி.
இரண்டு வெவ்வேறு குணாம்சம் உள்ள இரு போலீஸ்காரர்கள் சேர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தக் காமெடியை ஆக்சன் பேக்குடன் சொல்லவிருக்கிறார்கள். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிப்பார் எனத் தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.