வதந்தி விஷயத்தில் த்ரிஷாவையெல்லாம் தூக்கி சாப்பிடுவார் போலிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இப்போது இவரை சுற்றும் வதந்தி கொஞ்சம் சிக்கலானது.
3 படத்தில் ஜோடியான பிறகு தனுஷும், ஸ்ருதியும் நெருக்கமாகிவிட்டதாகவும், பார்ட்டிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை வெளிப்படையாகவே சில பத்திரிகைகள் எழுதின. இப்போது ரஜினி குடும்பம் இந்த நெருக்கத்தால் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூஇயர் கொண்டாட்டத்தில் ஸ்ருதியுடன் ஆட்டம் போட்டார் தனுஷ் என்பது லேட்டஸ்ட் குற்றச்சாற்று.
ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்ருதி. புத்தாண்டை எனது அம்மா, தங்கையுடன் கோவாவில் கொண்டாடினேன். பிறகு எப்படி தனுஷுடன் கொண்டாடியதாக செய்தி வெளியிடுகிறார்கள் என்று கேட்டுள்ளார்.
பெரிய இடத்துப் பிரச்சனை, வெளியே தெரியாம் பைசல் செய்வதுதானே அழகு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.