திரையுலக சங்கங்களில் அட்மிஷன் பீஸ் என்று லட்சக்கணக்கில் கறக்கிறார்கள். இதில் இயக்குனர்கள் சங்கத்தில் இணையும் உதவி இயக்குனர்களுக்குதான் குறைவான கட்டணம், ஐயாயிரம் ரூபாய்.
இதனை புதிய நிர்வாகிகள் அதிரடியாக இருபத்தைந்தாயிரமாக உயர்த்தினர். சோத்துக்கே சிங்கியடிக்கும் உதவிகளிடம் அவ்வளவு பணம் ஏது? போராட்டம் என்று உதவி இயக்குனர்கள் தெருவில் இறங்கியதால் நீண்ட யோசனைக்குப் பின் அறிவித்த இருபத்தைந்தில் பத்தை குறைத்திருக்கிறார்கள். அதாவது சங்கத்தில் சேர உதவி இயக்குனர்களுக்கு கட்டணம் பதினைந்தாயிரம் ரூபாய். இதில் அசோஸியேட் இயக்குனர் என்றால் இருபத்தைந்தாயிரம்தானாம்.
இதுவே ரொம்ப அதிகம் என முணுமுணுக்கிறார்கள் உதவி இயக்குனர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.