எப்பேர்ப்பட்ட நடிகர். அவருக்கு ஏன் ராவணன், ராஜபாட்டை என்று ஃபிளாப்பாகவே அமைகிறது என்று விக்ரம் ஏரியாவில் பெருமூச்சு விடுகிறார்கள். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தாண்டவம், அடுத்து நடிக்கும் இந்திப் படம் டேவிட் ஆகியவை விக்ரமின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராஜபாட்டை ரிலீஸுக்கு முதல்நாள் விக்ரம் செய்த உதவியை நினைத்து கண்கலங்குகிறது மெரீனா யூனிட்.
பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் புரமோ பாடலில் சசிகுமார், அமீர் ஆகியோருடன் விக்ரமும் நடித்துள்ளார். இந்தப் பாடலில் நடிக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்புவரை பாண்டிராஜுக்கும், விக்ரமுக்கும் அறிமுகமில்லை. என்றாலும் பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். முக்கியமான விஷயம் ரீடேக் போகாமல் எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.