மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காதலில் சொதப்புவது எப்படி இந்தியில்.

சென்ற வாரம் வெளியான படங்களில் காதலில் சொதப்புவது எப்படி மட்டும் தேறியிருக்கிறது. இளைஞர் பட்டாளத்தால் றெக்கைகட்டுகின்றன திரையரங்குகள். சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் இதனை நேரடியாக கண்டு கண்ணீர் மல்கியிருக்கிறார் இயக்குனர் பாலா‌ஜி மோகன். மனிதருக்கு இதுதான் முதல் படம்.

இப்படம் ல‌வ் ஃபெயிலியர் என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகி அங்கும் பட்டையை கிளப்புகிறது. இனி இந்தி மட்டும் பாக்கி. அதையும் விடுவானேன்.

விரைவில் ஹைதராபாத் செல்லவிருக்கும் பாலா‌ஜி மோகன் படத்தை இந்தியில் ‌ரீமேக் செய்வது குறித்து பேசவிருக்கிறார். சித்தார்த் ஏற்கனவே இந்தியில் பிரபலம் என்பதால் அவரே ஹீரோவாக நடிப்பார். ஹீரோயின்?

அதிர்ஷ்டமிருந்தால் அமலா பால்தான் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.