மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3 படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை.

இணையதளங்களில் தனுஷ்-ஸ்ருதி நடித்த '3' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

கொலைவெறி பாடலால் பெரும் பிரபலமான தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள '3' படம் நாளை வெளியாகிறது.

இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கஸ்தூரி ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தனுஷ் நடித்த '3' படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து, இணையதளம், குறுந்தகடுகளில் வெளியிட வாய்ப்புள்ளதால், '3' படத்தையும் இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே. வாசுகி விசாரித்தார்.

அப்போது, '3' படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் படத்தை திருட்டுத்தனமாக குறுவட்டுகளில் வெளியிடுவதற்கும் நீதிபதி தடை விதித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.