![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQP6Fy_Bw2l-dexRj7B3r-59jjF3gOj51zLbIEf6mg_8dYFVs6O81yLY3-s4PDfW1oHoyx3fn24tDT3PD0xse0vsUnBG-o604ddz4DEj55DmshQyxjlezA1JaRggxy2p-GDCjNu2tONto/s320/Hansika+Motwani+replace+for+Nayanthara+in+Delhi+Belly+Tamil+remake+with+Arya.jpg)
டெல்லி பெல்லி படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும் ஆர்யாவுடன் நயன்தாரா நடிப்பதாகவும் ஒரு செய்தி உலவியதல்லவா. அதில் சின்ன மாற்றம்.
இம்ரான்கான் நடிப்பில் அமீர்கான் தயாரித்த டெல்லி பெல்லி இந்தியில் ஹிட்டான படம். இதனை தமிழில் ரீமேக் செய்வதாக பல மாதங்களாகச் சொல்லப்பட்டு வந்து ஒருவழியாக இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஆர்யாவும், நயன்தாராவும் நடிப்பார்கள் என செய்திகள் வெளிவந்த நிலையில் உண்மை தகவல்கள் இதனை மறுக்கின்றன.
படத்தில் ஆர்யா நடிப்பது உண்மைதான். ஆனால் அவருக்கு ஜோடி நயன்தாரா அல்ல, ஹன்சிகா மோத்வானி. இவரின் தமிழ்ப் படங்கள் தொடர்ச்சியாக தோல்வி கண்டாலும் கொழு கொழு தேகத்துக்காக கொள்கைப் பிடிப்புடன் இவரையே தொடர்ந்து ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அழகை ஆராதிப்பதில் நாம் கெட்டிக்காரர்களாயிற்றே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.