மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நயன்தாராவுக்கு இது ஒன்பதாவது ( 9 ) மாதம்.

நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப் போட்டு ஒன்பது மாதங்களாகிறது. இந்த நீண்ட ஓய்வுக்கு புதன்கிழமை விடை தந்தார் நயன்தாரா.

காதலை உதறிய பிறகு நயன்தாராவின் மவுசு திரையுலகில் அதிக‌ரித்திருக்கிறது. தயா‌ரிப்பாளர்கள் அவரை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ய அம்முகிறார்கள். இதுவரை மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன். முதல் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் புதன்கிழமை தொடங்கியது.

வானம் க்ருஷ் இயக்கும் இந்தப் படத்தில் ராணா டக்குபதி ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இதுதவிர நாகார்ஜுன் நடிக்கும் படம், பூபதி பாண்டியன் இயக்கத்தில் கோபிசந்த் நடிக்கும் இருமொழிப் படம் என இரு படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

அ‌ஜீத் ஜோடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஒப்பந்தம் இன்னும் அதிகாரபூர்வமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.