கொலவெறிப் பாடல், படத்தின் கிளிப்பிங்ஸ் எல்லாவற்றையும் பார்த்த போது ஒரு அமெச்சூர் படத்தையே ஐஸ்வர்யாவிடம் எதிர்பார்த்தது தமிழகம். ஆச்சரியமாக கொஞ்சூண்டு மெச்சூரிட்டியும் படத்தில் தட்டுப்படுவது படத்தை காப்பாற்றியிருக்கிறது.
கொலவெறி ஏற்படுத்திய ஹைப்பினால் படம் வெளியான மூன்று நாட்கள் கூட்டம் அம்மும் என்பது தெரியும். அது அடுத்த வாரமும் தொடருமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. எதிர்பார்த்தது போல 18 பிளஸ்ஸிலிருக்கும் இளைஞர் பட்டாளம் நேற்று அதிகம். படத்தின் முதல் பகுதி ரொமான்ஸ் எண்பது சதவீதத்தினருக்கு பிடித்திருக்கிறது. பின் பகுதி கொஞ்சம் மொக்கை.
மொத்தமாகப் பார்த்தால் 3 ஒரு ஆவரேஜ் மசாலா. மரண மொக்கைகளுக்கு மத்தியில் இது எவ்வளவோ பரவாயில்லை. இயக்குனராக ஐஸ்வர்யா முதல் படியை வெற்றிகரமாகவே கடந்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.