அடர்ந்த கறுப்பு நிறம், படம் நெடுக ஸ்லோமோஷன் என பரிசோதனை முயற்சியாக வெளிசந்த போர்க்களம் படத்துக்குப் பிறகு பண்டி சரோஜ்குமார் இயக்கியிருக்கும் படம் அஸ்தமனம். பழம் தின்னு கொட்டைப் போட்டவர்களே மினிமம் கியாரண்டிக்காக டூயட்டும், காமெடிக் காட்சியும் வைக்கையில் இந்த இளைஞர் ஏறக்குறைய நிராயுதபாணியாக மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
அஸ்தமனம் ஒரு க்ரைம் த்ரில்லர். அதனால் படத்தில் பாடல் காட்சிகள் இல்லை. அதேபோல் இடைச்செருகல் காமெடி இம்சைகளும் இல்லை. அனைவருமே புதுமுகங்கள். இப்படியொரு தில் அனுபவ இயக்குனர்களிடமே காண முடியாது. அதற்காக பண்டி சரோஜ்குமாருக்கு ஒரு சபாஷ்.
ராஜேஷ், முணார் ரமேஷ், ராஜேஷ் கனகசபை, விக்டோரியா, வித்யா, சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை சித்தார்த் விபின், சி.சுதீப் ரெட்டி, எஸ்.சிவா ராஜசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
நாளை வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.