மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் தொடங்கியது.

1981ல் வெளியான எஸ்.ஏ.சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ‌ரீமேக் பாண்டிச்சே‌ரியில் தொடங்கியது.

இந்தப் படத்தை விஜய்யின் புதிய தயா‌ரிப்பு நிறுவனமான கில்லி ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் திருமணமான ‌ரீமா சென்னுக்கு முக்கிய வேடம். மீனாவும் படத்தில் இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு புது‌ச்சே‌ரியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. விக்ரம் பிரபு, ‌ரீமாசென் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக ‌ரீமாசென் இந்தப் படப்பிடிப்பில்தான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா என்பவர் படத்தை இயக்க, இயக்க மேற்பார்வை எஸ்.ஏ.சி.

விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.