மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


த்ரிஷா நட்சத்திர பேட்டி சினிமாவின் வெற்றி, தோல்வி நடிகை கையில் இல்லை.

கேரள நடிகைகள் ஆட்சி செய்யும் தமி‌ழ், தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக முன்னணியில் இருக்கிறார் த்ரிஷா. தமிழ்ப் பெண் என்ற அளவில் இது முக்கியமானது. இதற்குமுன் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பு, சிம்ரன் என எல்லோருமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முன்பு த்ரிஷா குறித்து வாரத்திற்கு நான்கு வதந்திகள் வரும். இப்போது ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. மே 4 த்ரிஷாவுக்கு 28 வயது. அவரது பேச்சிலும் அந்த முதிர்ச்சி வெளிப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்திருக்கிறீர்களே, என்ன காரணம்?

தமிழில் நடிக்கலைன்னு யார் சொன்னது. விஷாலுடன் சமரன் படத்தில் நடிச்சுகிட்டுதான் இருக்கேன். அடுத்து அகமது டைரக் ஷனில் ஜீவா நடிக்கிற படத்திலேயும் இருக்கிறேன்.

ஆனாலும் இது குறைவு இல்லையா?

நான் பத்து வருஷமா இந்த பீல்டில் இருக்கேன். ஒரே மாதிரியான வேடங்களில் நடிச்சு போரடிச்சுப் போச்சு. அதனால் டிபரண்டான கேரக்டர் ட்ரை பண்றேன். சமரனில் அப்படியொரு கேரக்டர். அகமது படமும் அப்படிதான். சவாலான வேஷங்கள் கிடைச்சா நான் எப்போதும் நடிக்கத் தயார்.

சவாலான வேஷம்னு சொல்றீங்க, ஆனா ஹீரோயின் ஓபியண்ட் கதையை தவிர்க்கிறீங்களே...?

ஒரு சினிமாவோட வெற்றியு‌ம், தோல்வியும் ஒரு நடிகை கையில இல்லை. இதை உறுதியா நம்பறேன். ஹீரோயின் ஓரியண்ட் படம்னா மொத்த சுமையும் நாமதான் தாங்கணும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் கெட்ட பெயர் முழுக்க நமக்குதான் வரும். அதையும் மீறி என்னை கவர்ற கதைன்னா ஹீரோயின் ஓரியண்ட் படம்னாலும் ஓகேதான்.

இந்தி பிரவேசம் சரியாக அமையாததில் வருத்தம் உண்டா?

நான் எப்போதும் இந்திக்குப் போகணும்னு விரும்பினதில்லை. ப்ரியதர்ஷன் சார் கூப்பிட்டார் சரின்னு பட்டது போனே‌ன், நடித்தேன். நான் முன்பே சொன்ன மாதி‌ரி ஒரு படத்தோட வெற்றிக்கும் தோல்விக்கும் நடிகை காரணமில்லை. இந்தியில் நடிக்க கேட்கிறாங்க. ஆனா பத்தோடு பதினொன்னா எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை. நல்ல ஆஃபர்கள் வந்தால் எனக்கும் பிடித்திருந்தால் பார்க்கலாம். தமி‌‌ழ், தெலுங்கில் நடிப்பதுதான் எப்போதும் எனக்குப் பிடிச்சிருக்கு.

திருமணம்...?

யாராக இருந்தாலும் ஒருநாள் திருமணம் செய்தாக வேண்டும். அப்கோர்ஸ் எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அதற்குள் திருமணம் முடிந்ததாகவு‌ம், காதலிக்கிறதாகவும் விதவிதமாக வதந்திகள். காதலித்து கல்யாணம் செய்ய எனக்கும் ஆசைதான். ஆனால் இன்னும் கொஞ்சநாள் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன்.

தெலுங்கு தம்முவில் உங்களுடன் கார்த்திகாவும் நடித்திருக்கிறாரே?

தெலுங்கில் இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதுசில்லை. படத்தில் என்னுடைய கேரக்டரை மட்டுமே நான் பார்ப்பேன். அந்தவகையில் தம்மு கதாபாத்திரம் பிடித்துதான் நடித்தேன். எல்லோரும் எதிர்பார்த்தபடி படத்துக்கு கிராண்ட் ஓபனிங் கிடைச்சிருக்கு.

அடுத்த தெலுங்குப் படம்...?

ரவிதேஜாவுடன் நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

த்ரிஷா என்றாலே பார்ட்டி என்றொரு பெயர் இருக்கிறதே...?

எனக்கு சினிமாவில் நண்பர்கள் அதிகம். மனசுக்கு நெருக்கமான நண்பர்களை பார்ட்டிகளில்தான் சந்திக்கிறேன். நண்பர்களின் பார்ட்டிகளை உங்களால் தவிர்க்க முடியாது. ரம்யாகிருஷ்ண‌ன், குஷ்பு, பிருந்தா மாஸ்ட‌ர், ரிமோசென் என்று சில பேர் இருக்கிறார்கள். சினிமாவுக்கு வந்தபோதே பழக்கம். அவர்களுடன் மனம்விட்டு பேச பார்ட்டிகள்தான் ஒரே வழி. இதை தப்பாகப் பார்த்தால் நான் என்ன செய்ய முடியு‌ம்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.