மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> டெல்லி பெல்லி ‌தமிழ் ரீமேக்கில் அஞ்சலி

சவாலான வேடம் என்றால் முதல் சாய்ஸ் அஞ்சலி. அதற்குப் பிறகே வேறு நடிகைகளை தேடுகிறார்கள் இயக்குனர்கள்.

கெட்டவார்த்தைக்காக புகழப்பட்ட இந்தி டெல்லி பெல்லியை தமிழில் யுடிவி ‌ ரீமேக் செய்வதும் ஆர்யா, ஹன்சிகா நடிப்பதும் தெ‌ரிந்ததே. இந்தப் படத்தை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். இவ்விரு படங்களில் நடித்திருந்த சந்தானமும் டெல்லி பெல்லி ‌ ரீமேக்கில் இருக்கிறார். புதுவரவாக பிரேம்‌ஜி அமரனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மே 7 படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளார் கண்ணன். இந்தப் படத்தின் பிளஸ்ஸே படத்தின் வசனங்கள்தான். குறிப்பாக லோக்கல் ப்ளேவர். இந்த வேலையை சச்சின் படத்தை இயக்கிய ஜ‌ரின் மகேந்திரனிடம் தந்துள்ளார் கண்ணன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.