மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ட்விட்டரில் நுழைந்த வடிவேலு.

பெரும்பாலான நட்சத்திரங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று புகுந்து விளையாடும்போது வடிவேலுக்கும் அந்த ஆசை இருக்கும்தானே. அவரும் தனது ட்விட்டர் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்.

வெறுமனே செய்தியாக இல்லாமல், வீடியோவில் அதனை அவர் அறிவித்த விதம் புதுசு என்றால் அறிவித்த ஸ்டைல் பழசு. நண்பர்கள் சொல்லியதால் ட்விட்ட‌ரில் அக்கவுண்ட் ஓபன் செய்ததாக சொன்ன வடிவேலு, ட்விட்டர் என்பதை டுபிட்டர் என்று உச்ச‌ரித்து தனது கிராமத்துத்தனத்தை வெளிப்படுத்த முயன்றது ஸாரி பாஸ், ரொம்ப செயற்கை. பட், அந்த மாடுலேஷன் பக்கா.

அடிக்கடி ட்விட்ட‌ரில் ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம் காமெடிப் புயல். அதற்குமுன், சிங்கமுத்துவை சந்திக்க வடிவேலு தூது அனுப்பினாரா இல்லை சிங்கமுத்து வடிவேலை தானாக தேடி வந்தாரா என்ற அரசியல் சர்ச்சைப் பற்றி ட்விட்டுங்களேன். அரசியல் வட்டாரத்தில் ஒரே புகைச்சலா இருக்கு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.