தமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்து, வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு தமிழ் படங்களும் கைவசம் உள்ளன.
இந்நிலையில், தான் நடனம் கற்றது குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:– என் சினிமா வாழ்க்கை நல்லபடியாக போகிறது. இடையில் சிறிது ஓய்வு எடுத்தாலும் பட வாய்ப்புகள் குறையவில்லை.
கதாநாயகர்களால் தான் நான் நடனம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. நான்கு பேர் சேர்ந்து இருந்தால் அந்த இடத்துக்கு போக பயப்படுவேன். பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடும் படி ஆசிரியை வற்புறுத்தினார். நிறைய ஆட்கள் பார்ப்பார்களே என்ற கூச்சத்தால் மறுத்து விட்டேன். அந்த கூச்சமும் பயமும் சினிமாவுக்கு வந்ததும் போய் விட்டது.
படப்பிடிப்பு அரங்கில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இப்போது நடனம் ஆடுகிறேன். முதலில் எனக்கு ஆட வரவில்லை. பெரிய கதாநாயகர்களிடம் இருந்து நடனம் கற்று கொண்டேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.