மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பூமியின் சுழற்சி வேகம் குன்றுவதால் ஜூன் மாத இறுதியில் ஒரு வினாடி அதிகம்.

லண்டனை தளமாக கொண்டு இயங்கும் டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி முறையானது முதன் முதலில் 1976-ல் தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை 26 முறை இது போல் நிகழ்ந்துள்ளது.

பூமி மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களுக்கிடையே புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளால் பூமியின் சுழற்சி வேகமானது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. 24 மணி நேரம் என்பது 86,400 வினாடி ஆகும். நாசாவின் கணக்குப்படி கடைசியாக 1820-ம் ஆண்டில் தான் சரியாக 24 மனி நேரம் என்பது நிகழ்ந்துள்ளது. டையனோசர்களின் காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாக இருந்துள்ளது. அதுமுதல் ஒவ்வொரு நாளிலும் 2.5 மில்லி வினாடிகள் அதிகரித்தபடி வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.