ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விஸ்வ வர்ணபால ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராகவும், துமிந்த திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கட்சியின் யாப்பு அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மாற்றத்துக்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தெரியவந்தது. துமிந்த திசாநாயக்க மற்றும் விஸ்வ வர்ணபால ஆகியோர் தமது பணிகளை முன் எடுத்து செல்ல தடை ஏற்படுத்த கூடாது என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்த வேளையில் இந்த விடயம் வெளியானது.
இந்தநிலையில், மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பணிகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை விதித்தது. அத்துடன் புதிய பதில் செயலாளர்களான விஸ்வ வர்ணபால மற்றும் துமிந்த திசாநாயக்கவின் பணிகளுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்தவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.