காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையை நடத்தியமை தொடர்பில் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட மூன்று பேருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை காலி பிரதான நீதிவான் நிலுப்புலி லங்காப்புர இன்று வழங்கினார்
பிரதிவாதிகள் முன்வைத்திருந்த மனுவை ஏற்றுக்கொண்டே, இந்த தடை நீக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இதேவேளை காவல்துறை நிதிமோசடி பிரிவை, தடைசெய்யுமாறு எல்லே குணவன்ச தேரர் தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
நிதிமோசடிக்கான காவல்துறை பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைத்தருமாறு தமக்கு அநாமதேய அழைப்பு வருவதாக எல்லே குணவன்ச தேரர் நீதிமன்றில் குறிப்பிட்டார்.அந்த அழைப்பு தற்போது தன்னுடைய நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் மனு விசாரணையை ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் விஜித மலல்கொட தீர்மானித்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.