மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.

நடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசிய கட்சி 93 ஆசனங்களை பெற்றதுடன், 13 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 106 ஆசனங்களை மொத்தமாக பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 83 ஆசனங்களை பெற்றதுடன், 12 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 95 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களை தன்வசம் ஆக்கியதுடன் 2 தேசிய பட்டியல் ஆசனங்களையும் சேர்த்து அந்த கட்சி 16 ஆசனங்களை தனதாகிக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி 4 ஆசனங்களை பெற்றதுடன், மேலதிக 2 தேசிய பட்டியல்ஆசனங்களுடன் 6 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.

இதுதவிர, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் எந்தவொரு தேசிய பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணம் / Eastern Province / නැගෙනහිර පළාත

வட மாகாணம் / Northern Province / උතුරු පළාත

மேல் மாகாணம் / Western Province / බස්නාහිර පළාත

ஊவா மாகாணம் / Uva Province / ඌව පළාත

தென் மாகாணம் / Southern Province / දකුණු පළාත

சப்ரகமுவ மாகாணம் / Sabaragamuwa Province / සබරගමුව පළාත

மத்திய மாகாணம் / Central Province / මධ්‍යම පළාත

வடமேல் மாகாணம் / Vayamba Province / වයඹ පළාත

வடமத்திய மாகாணம் / North Central Province / උතුරු මැද පළාත
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.