இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ள போதிலும் , அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் அடைந்த தோல்வியால், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதகா கருதப்படுகிறது.அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர். வன்னி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வினோநோகராதலிங்கம் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.
இவர்கள் நால்வரும், கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தவர்களாவர். அதேவேளை, முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து இம்முறை கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர்கள் சிலரும் தோல்வியடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குணசேகரம் சங்கர், சந்திரநேரு சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கோவிந்தன் கருணாகரம், குணசீலன் சௌந்தரராஜன், ஆகியோரும் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.