மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும் உதவி வழங்கிவைப்பு.

வோர் சைல்ட்  ஹொலன்ட் (War Child Holland) நிதி உதவியுடன்  எஸ்கோ நிறுவனம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவர் பிரிவுகளில் கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக்களையும்  சிறுவர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு சிறுவர் உரிமை பாதுகாப்பு , பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்களையும் ,வளர்ந்தவர்களையும் வலுவூட்டி வருகின்றது .

இதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள  விளையாட்டு கழகங்களுக்கும் ,வாசகசாலைகளுக்கும் விளையாட்டு பொருட்களும் ,புத்தகங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் இன்று பிற்பகல் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் கே .சிவாகரன் , நிறுவன அதிகாரி செல்வா ,மண்முனை வடக்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ் . உதயராஜ் ,  கிராம சேவை உத்தியோகத்தர்கள்  மற்றும்  கிராம கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.