மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி இரண்டாம் வட்டாரம்,மாரியம்மன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த வீட்டின் உரிமையாளரான எம்.குழந்தைவேல் என்னும் 55 வயதையுடையவரே சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு உறங்கச்சென்றவர் காலையில் எழுத்திருக்காத நிலையில் அறையின் கதவை திறந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய ஸ்தலத்துக்கு வருகைதந்த காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் மரண விசாரணைகளை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.