மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


"வழிகாட்டிகள் பூங்கா" மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி இன்று மட்டக்களப்பில் பிரமாண்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழிகாட்டிகள் விஞ்ஞானப் பூங்காவின் செயலாளர் கலாநிதி ரீ. மதிவேந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் .எம் . சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார் .

ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்  எம் . உதயகுமார் , வலய கல்வி பணிப்பாளர் கே . பாஸ்கரன் . பேராசிரியர்  மௌனகுரு , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் கே. அருள்நிதி மற்றும்  வைத்திய அதிகாரிகள் , மாணவர்கள் ,அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்றைய ஆரம்ப நிகழ்வில்  மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் வழங்கிய  மௌனகுருவின் “தாண்டவ தகனம்”-- மகாபாரதப் போரின் பின்னணியில் இருந்த இயற்கை அழிப்பை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடகமும் இடம்பெற்றது . இக்கண்காட்சியானது  இன்று முதல் செப்டெம்பர்  27வரை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள அரசினர் ஆசிரியர் கலாசாலையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் விஞ்ஞான மாதிரிகள், புத்தாக்கப் போட்டி , நேரடி விஞ்ஞானப் பரிசோதனைகள், கலை கலாச்சாரம் , செயற்பாடுகள் , பாரம்பரிய உணவுகளும் சிற்றுண்டிகளும்  மற்றும் மாலை வேளையில் நான்கு தினங்களுக்கு  வீதி நாடகங்களும்     இடம்பெறும்.

இக்கண்காட்சி  மட்டக்களப்பில் முதன் முறையாக இடம்பெறும் பல அம்சங்களைத் தாங்கிய இந்த விஞ்ஞானக்  கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது .
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )














Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.