இலங்கை மத்திய வங்கி தற்போதைய நிதிக்கொள்கையின் அடிப்படையிலான வட்டி வீதங்களில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளாது தொடர்ந்தும் ஒரே அளவில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் சேமிப்புகளுக்கான வட்டி வீதம் 6% ஆகவும் கடன்களுக்கான வட்டி வீதம் 7.50% ஆகவும் பேணப்படவுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிதிக்கொள்கைகளுடன் இணைந்து வௌிநாட்டு இறக்குமதிகளை குறைக்கும் வண்ணமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை மூலமாக பெறப்படும் வருமானம் 17.9% வீதத்தினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் 1.8% வீத அதிகரிப்பையும் காட்டுகின்றது.
எனினும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8.1% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- A.D.ஷான் -
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.