மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து நிதி அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தீர்மானம்.

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பட்ட பின்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பாலத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய நிதியமைச்சர் கருத்துகளை வெளியிட்டர்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது:

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சிலர் பேய் அறைந்ததைப் போன்று காணப்படுகின்றனர். வரவு செலவுத் திட்டத்தில் எந்த சுவையுமில்லை என ஒருவர் கூறுகின்றார். மற்றுமொருவர் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாகக் கூறுகின்றார். நாம் அப்பாவி மக்களின் சுமையைக் குறைத்துள்ளோம். நாட்டின் முதலீட்டை அதிகரித்துள்ளோம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை நாம் உயிர்ப்பித்துள்ளோம். ஒரு சிலரின் பைகளுக்குள் பணம் நிரம்பாத காரணத்தினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மாத்திரம் அல்ல வேறு விடயங்களையும் சேர்த்து செய்ய முயற்சிக்கின்றனர்.

- A.D.ஷான் -
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.