2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்கள் சார்ந்த விடயங்களை வலுபடுத்தும் நோக்கில் "துருனு சிரம சக்தி" எனும் தொனிப்பொருளில் நாடளாவியல் ரீதியில் உள்ள 365 பிரதேச செயலக பிரிவுகளில் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்க கிராம சேவை பிரிவில் உள்ள இந்து இளைஞர் மன்ற வளாகத்தில் சுமார் 250 மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் அறநெறி வகுப்புக்கான மண்டபம் நிர்மாணிப்பதற்ககான அடிகல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுக்கான இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர் ஜெ.பயஸ்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் மன்ற கிழக்குமாகான பணிப்பாளர் சுகத் ஹெவா விதாரண, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மண்முனை வடக்கு கிராம சேவைகள் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தில்லைநாதன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திருமதி ஜெ.கலாராணி, மண்முனை வடக்கு இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திருமதி பி.பிரியதர்சினி மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
இதனுடன் இணைந்ததாக பெரிய உப்போடை கிராம சேவை பிரிவில் உள்ள பொதுமக்கள் ஒன்றுகூடல் மண்டபத்தை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒடுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப நிகழ்வாக மரக்கன்று நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மரக்கன்றினை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.