மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


கைத்தொலைபேசிகளை காற்சட்டைப்பையில் வைக்கும் ஆண்களே உசார் உங்களின் விந்தணுகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

ஆண்களே உசார் ஆபத்து உங்களை நோக்கி காற்சட்டைப்பையில் கைத்தொலைபேசியை வைப்பதனால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஆராய்ந்ததுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், கைத்தொலைபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மெத்யூஸ் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்லவென சில விந்தணு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த குறிப்பிட்ட ஆண்களின் மற்ற பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உட்கொண்ட மருந்துகள் போன்றவற்றை இந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலையில் கைத்தொலைபேசிகளை காற்சட்டைப்பையில் வைப்பதனால் மட்டுமே இவர்களின் விந்தணு உற்பத்தியும் விந்தணுக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது என்கிறார் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விந்தணு ஆய்வாளர் வைத்தியர் எலன் பேசி தெரிவித்துள்ளார்.

தமது ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும் பியானோ மெத்யூஸ், கைத்தொலைபேசிகளின் சூடும், மின்காந்தப்புலம் மற்றும் கதிரியக்கவீச்சு ஆகியவை விந்தணுக்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமது ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கிறார்.
செய்தி ஆதாரம் BBC தமிழ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.