மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஈ ஓட்டிய மீனா

எஜமான் படம் ரிலீசான நேரத்தில் காலேஜ், ஸ்கூல் கட் அடிக்கும் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அப்படத்தில் மீனா சாகும் வரை மட்டுமே இந்த கட் அடிக்குற கூட்டம் தியேட்டருக்குள் இருக்கும். மீனா இறந்து ஐஸ்வர்யா வந்து ஆஜராகுற நேரத்துல இந்த கூட்டம் காலேஜூக்குள் ஆஜராகிடும்.

எஜமான் படத்திற்கு முன்பு என் ராசாவின் மனசிலே படம் ஹிட் என்றாலும் இளசு கூட்டம் கட் அடிச்சுட்டு தியேட்டருக்கு போகுற அளவுக்கு இந்த எஜமான் படத்தில்தான் மீனாவின் அழகில் மெருகு கூடியிருந்தது .

10 வருடங்களுக்கு மேல் கோலோச்சிய இவர் தமிழ், தெலுங்கில் ஜோடி சேராத நடிகர்களே இல்லை. நடிகர்கள், இயக்குநர்கள்,அரசியல்வாதிகள் என்று இவரோடு முடிச்சிட்டு கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஏராளம்.

இப்படியெல்லாம் ஜொலித்த இந்த நட்சத்திரத்தின் திருமண வரவேற்பா என்று ஆச்சர்யப்பட்டுத்தான் போகவேண்டும். நட்சத்திரக்கூட்டங்கள் மொய்த்ததால் அல்ல. எங்கே நட்சத்திரங்கள் என்று தேடிக்கண்டுப்பிடிக்க வேண்டியதாயிருந்தது.

கலைஞரின் சார்பில் ராஜாத்தி அம்மாள், ரஜினியின் சார்பில் லதாரஜினி, விஜயாகாந்த்தின் சார்பில் எல்.கே.சுதீஷ், விஜய்யின் சார்பில் ஷோபாசந்திரசேகர் என்று சார்பில்....சார்பில்...கொஞ்சம் பேர் தலைகாட்டினார்கள்.

கமல்,சத்யராஜ், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி,ஜீவா,குஷ்பு,பானுப்பிரியா, என்று கொஞ்சம் பேர் வந்திருந்தனர்.

ஆளே இல்லாத கடையில அப்படி யாருக்குடா டீ ஆத்துற.. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையான்னு கேட்குற அளவுக்கு பாடகி மஹதி கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டிருந்தாரார். காது கொடுத்து கேட்பார் யாருமில்லை என்பதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பாடிக்கொண்டேயிருந்தார்.

அவர் பாடிய கர்நாடிக் சங்கீதத்தை .காட்டுக்கத்தலா இருக்குப்பா...என்று கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வந்தவர்களும் வாழ்த்திவிட்டு போய்விட்டதால் சாப்பாட்டுக்கு கூப்பாடு போட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் வந்து சாப்பிட்டார்கள். மீனாவும், கணவர் வித்யாசாகரும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் நெடுநேரம்.

திரையுலகமே திரண்டு வந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. ஆனா இப்படி ஓ’ன்னு கிடக்குன்னா இதுக்கெல்லாம் மீனா அம்மாதான் காரணம். யாருக்கும் சரியா பத்திரிக்கை கொடுக்காம விட்டுட்டாங்க. மீனா வற்புறுத்தலின் பேரில் சில பேருக்கும் மட்டும் கொடுத்திருக்காங்க.

சோர்ந்து போக வேண்டிய அளவுக்கு கிப்ட் வாங்க வேண்டிய மீனா கை, ஈ ஓட்டுற அளவுக்கு ஆனதுக்கு அவுங்க அம்மாதான் காரணம் என்று மீனாவின் நெருங்கிய வட்டாரம் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.