மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்! -கமல்ஹாசன் பேச்சு

நர்த்தனஷாலா! பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் இந்த நல்ல காரியத்தை குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்க வருமாறு அழைத்திருந்தாராம் கமல்ஹாசன், பிரபுதேவா இருவரிடமும். நாங்கள் துள்ளி ஆடிய இடம் இது. எப்போ வேணுமோ சொல்லுங்க, வர்றோம் என்று இருவருமே ஆர்வம் காட்ட, 13ந் தேதி 12 மணிக்கு குது£கலத்துடன் குத்துவிளக்கேற்றினார்கள் இருவரும்.

நானும் ரகுராம் மாஸ்டரும் ஒன்றாகவே சுற்றுவோம். படிச்ச குடும்பத்திலிருந்து நாங்கள் வந்திருந்தாலும் எங்களுக்கு படிப்பு ஏறவே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு போறேன் என்று பனகல் பார்க்கிலே படுத்து கிடந்து விட்டு வீட்டுக்கு வருவார் ரகுராம். அப்படி ஒரு சிறந்த கல்வியாளர் அவர் என்று கமல் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தார் ரகுராம். நானும் அவரும் டான்ஸ் மாஸ்டர்களாக சில படங்களில் வொர்க் பண்ணியிருக்கிறோம் என்ற கமல், பழைய நினைவுகளில் மூழ்கினார். பிரபுதேவாவின் அப்பா தன்ராஜ் மாஸ்டரிடமிருந்து நின்றதால்தான் நான் அந்த இடத்தில் வேலைக்கு சேர முடிந்தது.

பிரபுதேவாவிடம் ஏராளமான திறமைகள் இருக்கு. அவரை வீணடிச்சிட வேண்டாம். லண்டனுக்கு அனுப்பி படிக்க வைங்கள் என்றேன் அவரது அப்பாவிடம். ஆனால், இங்கிருந்தபடியே அங்குள்ள கலைகளை ஏகலைவன் மாதிரி கற்றுக் கொண்டிருக்கிறார் அவர். பிரபுதேவா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்றார் கமல்.

என் பொண்ணு காயத்ரி ரகுராம், இந்த நாட்டியப்பள்ளியை அமெரிக்காவில் நடத்திட்டு இருக்காங்க. 150 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் வெள்ளைக்காரர்களும் அடக்கம். அதே மாதிரி ஸ்கூல் இன்னும் நிறைய இடங்களில் திறக்கணும்னு ஆசை இருக்கு. அதையும் கமல்தான் வந்து திறந்து வைக்கணும் என்ற ரகுராம் மாஸ்டரின் ஆசைக்கு மேடையிலேயே ஒப்புதல் அளித்தார் கமல்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.