
இந்தியாவின் மிக உயரமான ரெயில் நிலையம் குங் ரெயில் நிலையம்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில். அவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர்.
உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி சீன மொழியான மண்டாரின். (மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறதல்லவா)
உலகிலேயே மிக வேகமாக ஓடும் பூச்சி இனம் கரப்பான் பூச்சி. ஒரு கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்தில்தான் எட்வேர்- பாரீஸ்டன் தெருக்களிடையே 1863-ல் பாதாள ரயில் விடப்பட்டது.
உலகில் அதிக வேகமாக காற்று வீசக்கூடிய பகுதி அண்டார்டிகாவின் காமன்வெல்த் பே.
பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடலில் 1934-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முத்து கிடைத்தது. அதன் நீளம் 24 சென்டிமீட்டர், விட்டம் 14 செ.மீ.
வெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.
ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகம் "தி டெம்ப்ஸ்ட்''.
76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் ஹாலி.
உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பெயருடன் வெளியிடப்படும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.