இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்சைலோ மாடல்களான இ2, இ4, இ8 ஆகியன ரூ.6,24,000 முதல் ரூ.7,69,000 வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3,000 வாகனங்கள் விற்பனையானதிலிருந்தே க்சைலோ எந்த அளவிற்கு வாகன விரும்பிகளின் மனத்தை கவர்ந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும்.
டயோட்டாவின் இன்னோவா, ஷெவர்லேயின் டவேரா ஆகியவற்றிற்குப் போட்டியாகவே மகேந்திராவில் தயாரிக்கப்பட்ட க்சைலோ, திட்டமிடுதலின்போது இன்ஜீனியோ என்றே பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மகேந்திரா கார் தொழிற்சாலையில் க்சைலோ உற்பத்தித் துவங்கியது.
க்சைலோவின் சிறப்பான வடிவமைப்பிற்கு அடிப்படையே வாகன ஓட்டுநரின், பயணிகளின் வசதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான். இவ்வாறு உள்வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு வாகனத்தின் புற அமைப்பு வடிவமைக்கப்பட்டதே க்சைலோ பெற்றுவரும் வரவேற்பிற்குக் காரணமாகும்.
இன்னோவாவை விட வசதியாகவும், அதனைவிட குறைந்த விலையிலும் ஒரு நீண்ட தூர பயண வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே க்சைலோ தயாரிக்கப்பட்டுள்ளது.
112 போர் ஹார்ஸ் பவர் திறன் கொண்ட இயந்திரத்துடன் கூடிய க்சைலோவின் முன் இருக்கைகளை முழுமையாக சாய்த்து மிக வசதியான படுக்கையாக்கிக் கொள்ளலாம்.
கார் பயணிகளின் ஒவ்வொரு அணுகுமுறையையும் நுணுக்கமாக கவனித்து, அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் முழுமையாக அளித்து வடிவமைக்கப்பட்டதன் விளைவே உலகத் தரத்திற்கு இணையான மிகச் சிறப்பான வடிவமைப்புடன் கூடிய நீண்ட தூர பயண வாகனமாக க்சைலோ திகழ்கிறது என்று மகேந்திரா நிறுவனம் கருதுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.