ஐம்பதாவது படமான சுறாவில் பிஸியாகிவிட்டார் விஜய். விஜய்யும், தமன்னாவும் இடம்பெறும் காட்சிகளை கேரளாவின் ஆலப்புழாவில் படமாக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.
தீபாவளிக்கு அவரது வேட்டைக்காரன் வெளியாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
விஜய், அனுஷ்கா இடம்பெறும் பாடல் காட்சி மற்றும் சில டாக்கி போர்ஷன் இன்னும் படமாக்கப்பட உள்ளதாம். இதில் பாடல் காட்சியை ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அனுஷ்கா சூர்யாவின் சிங்கம் படத்தில் பிஸியாக இருப்பதால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.
இந்த சிக்கல் காரணமாக படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேட்டைக்காரனை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே கண்டேன் காதலை படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளது. தவிர தனுஷின் குட்டி படத்தை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவருமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரனை தீபாவளிக்கு எதிர்பார்க்காமல் இருப்பதே ஏமாற்றத்தை தவிர்க்க ஒரே வழி என்கிறார்கள். புரிந்து கொள்வார்களா ரசிகர்கள்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.