Wednesday, January 13, 2010

> பையா - பல மொழிகளில்

20 கோடி ரூபாயில் தயாராகியிருக்கிறது பையா. தமிழின் முதல் ரோட் படம். ராம்கோபால் வர்மாவின் தயா‌ரிப்பில் வெளிவந்த ரோட் படத்தின் தழுவல் பையா என்று பரவலான பேச்சு. இதனை திட்டவட்டமாக மறுக்கிறார் லிங்குசாமி.

ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதையும் கறாராக மறுத்திருக்கிறார் லிங்கு. முழுக்க அவரது சிந்தையில் உதித்த கதையாம் பையா. மிலிந்த் சோமன் வில்லனாக நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் சில சதவீதம் உயர்த்தியிருக்கிறது.

விஜய்க்கு லிங்குசாமி கதை தயார் செய்து காத்திருந்தாலும் பையாவை தெலுங்கு, இந்தி மொழிகளில் இயக்கும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. தெலுங்கில் லிங்கு இயக்கத்தில் நடிக்க ராம்சரண் தேஜா தயாராக இருக்கிறார். ஏற்கனவே இவரது ரன் இந்தியில் அபிஷேக்பச்சன் நடிப்பில் ‌‌‌ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இயக்கியவர் கேமராமேன் ‌‌ஜீவா.

ஆனால் இந்த பிற மொழி கொள்கையெல்லாம் பையாவின் வெற்றியை பொறுத்தே அமையும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.