தமிழர்கள் எதை உடுத்த வேண்டும், எதை குடிக்க வேண்டும் என்பதை கண்காணிப்பதற்கென்றே பல கலாச்சார வாட்ச்மேன்கள் இங்குண்டு. அதில் இந்து மக்கள் கட்சியின் பணி ‘மகத்தானது.’
காதலர்களுக்கு தாலி வாங்கித் தருதல், நடிகைகளின் ஆடைகளுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்துதல் என்று இவர்களது கலாச்சார சேவைகள் பல வகையானவை. சினிமா சம்பந்தப்பட்ட சர்ச்சை என்றால் உடனே கச்சை கட்டி இறங்குவது இவர்களின் ஆகப் பெரிய எண்டர்டெயின்மெண்ட்.
சமீபத்தில் நடந்த காவல்காரன் பட பூஜையில் கலந்து கொண்ட விஜய், பூசாரி கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளவில்லையாம். பத்திரிகையில் அரைவரி செய்தியாக வந்த இந்த தகவலை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.
விஜய் அடிப்படையில் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்துக்கள் படம் பார்ப்பதால்தான் அவரது படம் ஓடுகிறதாம். அதனால் அவர் விபூதி பூசிக் கொள்ளாதது தவறாம். இந்துக்களின் நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர் எதற்கு கோயிலுக்கு வர வேண்டும் என்று லாஜிக்காகவும் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
இந்தமுறை கண்டனத்தோடு விட்டுவிட்டவர்கள் அடுத்தமுறை போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.