மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்பு - தயாநிதி அழகி‌ரி தயா‌ரிப்பில்

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்க சிம்பு வாலிபன் படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்து வருடங்கள் ஓடிவிட்டது. இன்னும் வாலிபன் வாசல் தாண்டுவதாக இல்லை. கோ படத்திலிருந்து விலகிய நிலையில், அடுத்து வாலிபனை சிம்பு ஆரம்பிப்பார் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் தமிழ் சினிமா கிளைமாக்ஸ் மாதி‌ரி சின்ன டுவிஸ்ட்.

லிங்குசாமி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு. லிங்குவின் மனதில் ஏற்கனவே குடிகொண்டிருக்கும் கதை என்பதால் பரபரவென ஸ்கி‌ரிப்ட் வேலைகளை முடித்து ஜூனில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம். அப்படியானால் வாலிபன்?

பொறுமை இழந்த சக்ரவர்த்தி வாலிபனை தயா‌ரிக்கும் திட்டத்தை கைவிட்டதாகவும், அந்த பொறுப்பை தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

வாலிபனில் தனக்கு ஜோடியாக நடிக்க சிம்பு டிக் செய்திருப்பது இந்தி நடிகை சோனம் கபூரை. இதற்காக நடிகர் அனில் கபூரை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்பு. சோனத்தை ஒப்பந்தம் செய்ய எதற்கு அனில் கபூருடன் சந்திப்பு? வேறொன்றுமில்லை, அனில் கபூ‌ரின் மகள்தான் சோனம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.