மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமலுடன் மோதும் சாந்தனு

ஹோசிமின் இயக்கும் ஆயிரம் விளக்கு படத்தில் கமல் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே கமல் என்ற பெய‌ரில் ஒரு மலையாள இயக்குனர் இருக்கிறார். நடிகர் கமலுக்கும் இவருக்குமான பெயர் குழப்பமே ரசிகர்களுக்கு பெரும் பஞ்சாயத்தாக இருக்கிறது. இதில் இன்னொரு கமலும் வந்தால்...?

இந்த‌க் கமல் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறவர். ஆயிரம் விளக்கு படத்தில் சாந்தனுவுடன் மோதும் வில்லனாக அறிமுகமாகிறார். தாதா கதையான இதில் தாதா சத்யராஜை திருத்தும் வேடம் சாந்தனுவுக்கு. அப்படியே கமல் என்ற வி‌ல்லனின் பெயரையும் திருத்தினால் புண்ணியமாகப் போகும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.