மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சுறா முதலிடம் - சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்கு‌த் தள்ளி சுறா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

5. கோ‌ரிப்பாளையம்
ராசுமதுரவனின் இந்த மதுரை சரவெடிக்கு பெண்களின் ஆதரவு குறைவாகவே உள்ளது. படத்தில் மிகுந்திருக்கும் ஆக்சனும், காமமும் காரணமாக இருக்கலாம். வெளியான முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 8.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

4. குரு சிஷ்யன்
‌ரிட்டையர்ட் சத்யரா‌ஜ் நடித்திருப்பதாலா தெ‌ரியவில்லை, குரு சிஷ்யன் திரையரங்குகளில் யூத்களின் அட்டகாசத்தை காண முடியவில்லை. முதல் மூன்று தினங்களில் இப்படம் 9.8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

3. குட்டிப் பிசாசு
ராம.நாராயணனின் மற்றுமொரு வீடியோ கேம். குழந்தைகளை குறி வைத்து எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அம்பு ச‌ரியாக எய்யப்படவில்லை என்றே தெ‌ரிகிறது. இதன் மூன்று நாள் கலெ‌க்சன் 12.9 லட்சங்கள்.

2. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
சி‌ரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கதை. ஆனால் இன்ஸ்டா‌ல்மெண்டில்தான் சி‌ரிப்பு வருகிறது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 16.2 லட்சங்கள்.

1. சுறா
என்னதான் சுமாறாக இருந்தாலும் ஓபனிங்கில் விஜய் படத்தை அடித்துக் கொள்ள - ர‌ஜினி, கமல் தவிர்த்து - யாருமில்லை. சுறாவின் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 58.9 லட்சங்கள். ஒரு வார முடிவில் 2.05 கோடிகளை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.