சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சுறா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வாரம் வெளியான படங்களில் எதுவும் வசூலை வாரி குவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
5. கோரிப்பாளையம்
அளவுக்கதிகமான வன்முறை, படம் நெடுக நிறைந்திருக்கும் நெகடிவ் கதாபாத்திரங்கள், இவை இரண்டும் இராசுமதுரவனின் கடும் உழைப்பை வீணடித்துவிட்டன. சென்னையில் வசூல் வெகுவாக குறைந்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல் 7.27 லட்சங்கள். இதன் மொத்த சென்னை வசூல் 25 லட்சங்கள்.
4. குரு சிஷ்யன்
குளறுபடியான கதை, புளித்த காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வசனங்கள், பாடல்கள், சிறு பிள்ளைத்தனமான திரைக்கதை... இத்தனையும் இணைந்த ஷக்தி சிதம்பரத்தின் படம் நாலு நாளை தாண்டி ஓடுவதே அதிசயம். இரண்டு ஹீரோக்கள் இருந்தும் இதன் சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள் மட்டுமே. இதுவரை இதன் சென்னை வசூல் 27 லட்சங்கள்.
3. குட்டிப்பிசாசு
ராம.நாராயணனின் மற்றுமொரு சீசன் பிசினஸ். கோடை விடுமுறைக்கு குழந்தையை குறிவைத்து ட்ரான்ஸ்பார்மர் ஹாலிவுட் படத்தின் கார் மனிதனை ‘சுட்டிருக்கிறார்.’ அருந்ததி மேஜிக் இந்தமுறை மிஸ்ஸிங். இதுவரை 33 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 8.43 லட்சங்களை மட்டு வசூலித்துள்ளது.
2. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
கோடை விடுமுறைக்கு வந்தப் படங்களில் மக்களிடம் சுமாரான வரவேற்பையாவது பெற்ற படமென்றால் அது சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். ஆபாசம், இரட்டை அர்த்தம் எதுவுமில்லாத இந்த கௌபாயை ரசிகர்கள் குடும்பமாக வந்து ரசிக்கிறார்கள். இதன் சென்ற வார இறுதி வசூல் 18.9 லட்சங்கள். இதுவரையான சென்னையின் மொத்த வசூல், 52 லட்சங்கள்.
1. சுறா
தொடர்ந்து முதலிடத்தில் சுறா. 58 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த சுறா சென்ற வாரத்தில் ஏறக்குறைய 20 லட்சங்கள் குறைந்து 37.3 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதிக படங்கள் வெளியாவதால் சுறாவின் வசூல் மேலும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இரண்டு வார முடிவில் 2.85 கோடிகளை சுறா வசூலித்துள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.