மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பூர்ணா - ரவுடிப் பெண்

நடிகை பூர்ணா ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்லம் ஏரியாவில் 40 நாட்கள் துரோகி படத்துக்காக நடித்து முடித்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததிலிருந்து அங்குள்ள மக்கள் தன்னிடம் வெள்ளந்தியாகவும், பாசமாகவும் பழகியதை சிலாகித்து பேசி வருகிறார்.

ஏழையான மக்கள்தான் என்றாலும், கள்ளம்கபடம் இல்லாதவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களின் ஒற்றுமை ஆச்சரியமான ஒன்றாய் இருந்தது.

யூனிட்டில் உள்ளவர்களை விட அந்த மக்களிடம் நான்தான் அதிகம் பழகினேன். காரணம் துரோகியில் ஸ்லம்மில் வசிக்கும் ரவுடிப் பெண் கேரக்டர் என்பதால் அங்குள்ள பெண்களின் பேச்சு, நடை, பாவனை அனைத்தும் கற்றுக் கொண்டேன் என்கிறார்.

மேலும், கும்பமேளா, அர்ஜுனன் காதலி, வித்தகன், வேலூர் மாவட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பூர்ணா. சீக்கிரம் நம்பர் ஒன் இடத்துக்கு வாங்க. அந்த இடம் காலியாகத்தான் இருக்கு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.