பொதுவாக ரீமேக்கில் அதிக ஆர்வமில்லாதவர் சிம்பு. அவரையே ஒரு தெலுங்குப் படம் ஆட்டிப் படைத்திருக்கிறது. அந்தப் படம்தான் இப்போது சிம்பு நடிப்பில் வானம் என்ற பெயரில் தயாராகி வருகிறது.
தெலுங்கில் கிரிஷ் இயக்கத்தில் வெளியான படம் வேதம். அல்லு அர்ஜுன் கேபிள் ராஜுவாக நடித்திருந்த இந்தப் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்கள் தவிர மனோஜும் படத்தில் உண்டு.
வெளியான முதல் ஐந்து தினங்களில் இப்படம் பத்து கோடிக்கு மேல் வசூலித்து ஆந்திராவை ஆச்சரியப்பட வைத்தது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை லம்ப்பாக ஒரு தொகைக்கு ஆர்.பி.சௌத்ரி வாங்கியிருந்தார்.
இந்தப் படத்தைதான் வானம் என்ற பெயரில் கிரிஷ் தமிழில் இயக்குகிறார். அல்லு அர்ஜுன் வேடத்தில் சிம்பு நடிக்க அனுஷ்காவே இதிலும் ஹீரோயின். படத்தயாரிப்பு சௌத்ரியிடமிருந்து விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷுக்கு கை மாறியிருக்கிறது.
வானத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா கேமரா, எடிட்டிங் ஆண்டனி. முதலில் குத்துப் பாடலொன்றை படமாக்கியுள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.