கமல், ரஜினி தவிர்த்து அர்ஜுனுக்கு முன்னும் பின்னும் வந்த நடிகர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டனர். ஆனால் ஆக்சன் கிங் என்ற அடையாளம் இன்றும் அர்ஜுனை காப்பாற்றி வருகிறது.
அர்ஜுன் நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
முதலில் வந்தே மாதரம். மம்முட்டியுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. தமிழுக்கு அறுவடை என்றும் மலையாளத்துக்கு வந்தே மாதரம் என்றும் பெயர் வைத்திருந்தனர். இப்போது இரண்டு மொழிகளுக்கும் ஒரே பெயர், வந்தே மாதரம்.
இதையடுத்து கிச்சா இயக்கிய மாசி வெளியாகிறது. இதில் அர்ஜுனுக்கு போலீஸ் அதிகாரி வேடம். மசில் பவரை விட மைண்ட் பவரை நம்பும் போலீஸ் அதிகாரி.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து ஏ.வெங்கடேஷின் வல்லக்கோட்டை வெளியாகிறது. இது வெங்கடேஷின் காஸ்ட்லி படம்.
நான்காவதாக மேஜர் ரவி இயக்கும் மெய்காண். காந்தகார் படத்தை முடித்த பின் மெய் காண் படத்தில் முழு வீச்சில் ஈடுபடயிருக்கிறாராம் படத்தை இயக்கும் மேஜர் ரவி.
இந்தப் படங்கள் வெளிவரும் முன் மேலும் சில புதிய படங்களில் ஆக்சன் கிங் கமிட்டாவார் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் கூறியது போலவே என்னக்கும் ஒரே ஆச்சர்யம் தான் அர்ஜுனுக்கு கை கொடுப்பது அவரின் உடல் பயிற்சி தான்
ReplyDelete