மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சர்வதேச திரைப்பட விழா சென்னையில்

சென்னையில் நடக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இன்டோ சினி அப்‌ரிசியேஷன் நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா.

கடந்த ஏழு வருடங்களாக டிசம்பர் மாதம் இந்த திரைப்பட விழாவை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. பெரும்பாலும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆனந்த் திரைப்பட வளாகம் மற்றும் ஃபிலிம் சேம்பர் திரையரங்கு ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட்டன. ஆனந்த் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்ட பின் உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்துக்கு திரைப்பட விழா மாற்றப்பட்டது.

இந்த வருடம் மேலும் சில திரையரங்குகளில் படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். விழாவின் பட்ஜெட்டும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு இந்த திரைப்பட விழாவுக்கு உ‌ரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் வேண்டுகோள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.