ஷங்கர் மீது சித்தார்த்துக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. எந்த சித்தார்த் என்ற கேட்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக். பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டாரே... அதே சித்தார்த்தான்.
தெலுங்கில் பிஸியாக இருக்கும் சித்தார்த் ரங் தே பசந்திக்குப் பிறகு அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். பிஸியாக நடிக்கும் போதே, நடிப்பு போரடித்துவிட்டது, மியூசிக் பண்ணப் போறேன் என்று இவர் கொடுக்கும் பில்டப்புகள் அலாதியானவை.
நிற்க, நமது விஷயத்துக்கு வருவோம். 3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார் அல்லவா. அதில் சித்தார்த்தும் நடிக்கிறார் என யாரோ எழுத, பொங்கிவிட்டார் சித்தார்த்.
3இடியட்ஸ் ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்தது. ஆனால் பாய்ஸ் படத்தில் நடித்தது மிக மோசமான அனுபவம், பாய்ஸ் என்னுடைய முதல் படம் என்றாலும் தெலுங்குப் படத்தைதான் எனது முதல் படம் என்று சொல்வேன் என ஷங்கரை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
முகம் தெரியாமல் இருந்தவருக்கு முகவரி கொடுத்ததற்கு கிடைத்த பரிசுதான் இந்த பேச்சு. கவுண்டமணி பாணியில் சொன்னால்,
சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.