மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நான் மகான் அல்ல சென்சா‌ரில் சிக்கியது.

வெண்ணிலா கபடிக்குழுவை இயக்கிய சுசீந்திரனின் படம் என்பதால் நான் மகான் அல்ல படத்தை திரையுலகமும், ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள்.

வரும் 20ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதேநாள் பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் தயா‌ரித்திருக்கும் கே.வி.குகனின் இனிது இனிது படமும் திரைக்கு வருகிறது.

இனிது இனிது சென்சா‌ரில் சின்ன சேதாரம்கூட இல்லாமல் யு சான்றிதழ் வாங்கியுள்ளது. நான் மகான் அல்ல ஆ‌க்சன் படம். அதனால் சின்னச்சின்ன சிராய்ப்புகள் சென்சா‌ரில் ஏற்பட்டிருக்கிறது. படத்துக்கு சென்சார் கொடுத்திருக்கும் சான்றிதழ், யு/ஏ.

நான் மகான் அல்ல படத்தில் கார்த்தி சென்னையைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.